பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 165

என்றும்,

எனவும்

"கதையும் பெரும்பொருளும் கண்ணா! நின்பேரே, இதயமிருந்தவையே ஏத்தில் - கதையும் திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்

பருமொழியால் காணப்பணி”

"கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை கொடி தென்றது கூடா முன்னம் - வடிசங்கம்

கொண்டானைக் கூந்தல் வாய்க் கீண்டானைக்

கொங்கைநஞ்

சுண்டானை ஏத்துமினோ உற்று”

“மாலே! நெடியோனே! கண்ணனே விண்ணவர்க்கு மேலா, வியன் துழாய்க் கண்ணியனே-மேலால் விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே, என்றன்,

அளவன்றால் யானுடைய அன்பு”

என்றெல்லாம் மனமுருகி ஆழ்வார் பெருமான் பாடி மகிழ்கிறார்.

பேயாழ்வார்

பேயாழ்வார், மயிலையில் ஒரு கிணற்றில் இருந்த செவ்வல்லிப் பூவில் பிறந்ததாக ஆழ்வார்களின் திவ்ய வரலாறு கூறுகிறது. இவரும் பிறப்பால் சாதியற்றவர் என்பது ஒரு முக்கியமான செய்தியாகும்.

பேயாழ்வார் அருளியுள்ள அந்தாதி மூன்றாம் திருவந்தாதி