பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 156

எனப்பெயர் பெற்றுள்ளது. இந்த ஆழ்வாரும் ஒரு யோகி எனப் பெயரும் புகழும் பெற்றவராகும்.

"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன் திகழும், அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன் பால் இன்று”

என்று தனது பாடல்களைத் தொடங்குகிறார்.

எனவும்,

“அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் - உடைந்ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்

பேய்ச்சி பாலுண்ட பிரான்” என்றும்,

"பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய் தெருளா மொழியானைச் சேர்ந்து”

“உலகமும் ஊழியும் ஆழியும் ஒண்கேழ் அலர்கதிரும் செந்தியும் ஆவான்-பல கதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே

பூரித்தென் நெஞ்சே புரி” எனவும்,