பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 167

"நீயன்றே நீரேற்றுலகம் அடியளந்தாய் நியன்றே நின்று நிலை மோய்த்தாய்-நீயன்றே மாவாயுரம் பிளந்து மாமருதினுாடு போய், தேவாகரம் பொருதாய் செற்று”

எனவும்,

" பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக் காத்துாடு போய் உண்டு உதைத்து-கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான்

வெற்றிப்

பணிலம் வாய் வைத்து கந்தான் பண்டு”

எனவும்,

" மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடாற்றா மகன்”

எனவும், பலவாறாகப் பல பாடல்களிலும் கண்ணனைக் குறித்தும் கண்ணன் பெருமைகளையும் கண்ணனுடைய அருஞ்செயல்களையும் குறித்தும் யோக நிலையில் நின்று அருமையாக ஆழ்வார் பாடுகிறார்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் ஆழ்வார்களில் முக்கியமானவர். முக்கியமானவர்களில் முக்கியமானவராகப் போற்றப்படுகிறார். வைணவப் பெரியார்களில் ஆழ்வார்கள் என்றும் ஆச்சாரியார்கள் என்றும் இரு பிரிவாக அழைக்கப்படுகிறார்கள். அதில் நம்மாழ்வார் இருபிரிவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவருடைய