பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 169

பாவித்து மிகவும் நயமாகவும் நுட்பமாகவும் அகப்பொருளைப் பாடியுள்ளார்.

அகப்பொருளைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் மிகவும் நயமாகவும், நுட்பமாகவும், அழகியல் நிறைவுடனும், அழகுணர்ச்சியுடனும் விவரித்துக் கூறுகின்றன. இரதியும் மன்மதனும் காதல் தேவதைகள். மற்றவர்கள் உள்ளத்தில் காதல் உணர்வுகளைத் துண்டக் கூடிய சக்தி படைத்தவர்கள். இரதியும் மன்மதனும் இந்திய இலக்கியங்களின் தனித்தன்மை படைத்தவர்கள். “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை” என்னும் மிகவும் அழகான மிகச் சிறப்பான சொற்களில் அபூர்வமான கருத்துக்களை மிகவும் நுணுக்கமாக பாரதி குறிப்பிடுகிறார்.

இந்த நுட்பமான சொற்களுக்கு உலக அகப்பொருள் இலக்கியங்களில் ஈடுஇணையேயில்லை. சாதாரண நெருப்பு நெருங்கினால் சுடும், நீங்கினால் விடும் ஆனால் காதல் நெருப்போ நீங்கினால் சுடும், நெருங்கினால் விடும் என்பதை மிகவும் அழகாக, நயமாக நுட்பமாக வள்ளுவப் பேராசான் கூறுவதைக் காண்கிறோம்.

அறம்பொருள் இன்பம் வீடு என்பது மனித வாழ்க்கையின் புருஷார்த்தங்களாகும் என்று இந்து தர்மம் கூறுகிறது. இவை கடினமான உண்மைகள். இவையனைத்தையும் ஆண்டவனோடு இணைத்துப் பக்தர்கள் பரவசப்பட்டுப் பாடியிருக்கிறார்கள். அறத்தோடு, அற வாழ்க்கையோடு இணைத்து ஆண்டவனைப் பாடியிருக்கிறார்கள். உலக வாழ்க்கை, உலக மக்கள் நலன்கள் லெளகீக நலன்கள், வாழ்க்கை, அதற்கான பொருளாயத செளகர்யங்கள், அறுசுவை உணவும் பால் படைப்புகளும், ஆடை ஆபரணங்கள், நல்ல வீடு வாசல் வசதிகள், நகை நட்டு, குடும்ப நலன்கள் விருத்து உபசாரங்கள், ஆடல் பாடல், இசை, முதலிய பல இனிமையான வாழ்க்கை வசதிகள் பலவற்றையும் ஆண்டவனோடும், கோவில்கள், கோவில் பூசைகள் முதலியவற்றுடனும் இணைத்து