பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் . 173

இன்னஞ் செல்விரே, இதுவோ தகவென்றிசை மின்களே!

என்று தலைவி அன்னத்தையும் வண்டுகளையும் தூது விடுகிறார். ஆழ்வார் தன்னைத் தலைவியாகப் பாவித்துப் பாடியுள்ளது இப்பாடல்.

" நியமுயர் கோலமும் பேரும்

உருவும் இவையிவை யென்று

அறமுயல் ஞானச்சமயிகள்

பேசிலும் அங்கெங்கெல்லாம்

உறவுயர் ஞானச் சுடர் விளக்

காய்நின்ற தன்றி யொன்றும் பெறமுயன்றார் இல்லையால் எம்பி

ரான் தன் பெருமையையே

என்று தலைவி, தலைவனது பெருமையைப் புகழ்ந்து கூறுகிறார்.

சுருங்ககுறி வெண்ணெய் தொடுவுண்ட

கள்வனை, வையமுற்றும்

ஒருங்கற வுண்ட பெருவயிற் றாளனை, மாவலி மாட்டு இருங்குறள் ஆகி இசைய வோர் மூவடி வேண்டிச் சென்ற

பெருங்கிறி யானையல்லால் அடி

யேன் நெஞ்சம் பேணலதே என்று தலைவி உறுதியாகக் கூறுகிறாள் மேலும்,