பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 175

குணங்களையும் நம்மை உணரச் செய்வார் என்பது வைணவ சம்பிரதாயத்தின் சாரமாகும். மனிதன் எல்லா நலன்களையும் பகவானுடைய அருளையும் இவ்வுலகிலேயே பெறலாம். வேறு எங்கோ செல்ல வேண்டியதில்லை என்னும் கருத்து வைணவத்தின் தனிச் சிறப்புமிக்க கருத்தாகும்.

இதையே பாரதி, எல்லா நலன்களையும் இவ்வுலகத்திலேயே, இக வாழ்விலேயே கொண்டு வருவோம் என்று தனது பல பாடல்களிலும் உறுதிப்படக் கூறுகிறார். வீடுபேறு என்பது, முழுவிடுதலை என்பதாகும். அம்முழுவிடுதலை என்பது வேறு உலகில் அல்ல, இவ்வுலகிலேயே இவ்வுலக வாழ்க்கையிலேயே நிலைநாட்ட வேண்டும் என்பது பாரதியின் கொள்கை நிலையாகும்.

ஆழ்வாரும் தனது பாடல்களில் பகவான் பெருமைகளை இவ்வுலகிலேயே காண்கிறார்.

நளிர் மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி இமையவர் தலைவனும் முதலா யாவகையுலகம் யாவரும் அகப்பட நில, நீர், தீ, கால், சுடர் இரு விசும்பும், மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும், அகப்படக்கரந்து, ஒர் ஆலிலை சேர்ந்தாவம் பெருமா மாயனையல்லது

ஒருமா தெய்வம் மற்றுடைய மோயாமே!

என்று ஆழ்வார் பாடுகிறார்.

பெரிய திருவந்தாதி

உலக வடிவில் உள்ள கண்ணனையே என் நெஞ்சிற்கண்