பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும்-அ.சீனிவாசன்

14


வடிவங்களில் கண்டும், கற்பித்தும் மிகவும் அபூர்வமான பல அறிய, காலத்திற்கேற்றக் கருத்துக்களையும் வெளிப்படுத்தித் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டும் அர்ப்பணித்துக் கொண்டும் கண்ணனுடன் இரண்டறக் கலந்தும் பாடியுள்ளதைக் காண்கிறோம்.

ஆழ்வார்களும் பாரதியும் கண்ணனைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களில் சில சாகாவரம் பெற்ற கருத்துமிக்கத் தமிழ்ச் சொற்களைச் சந்தித்திருக்கிறோம்.

பெரியாழ்வாரின் “பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா” என்னும் அருமையான சொற்கள் உலகம் உள்ளவும், தமிழ் உள்ளளவும் நிற்கும்.

திருவடி முதல் திருமுடி வரைக்கண்ணனின் திருமேனியழகைப் பெரியாழ்வார் பாடுகிறார்.

“முத்தும், மணியும், வயிரமும் நன்பொன்னும் தத்திப்பதித்துத் தலைப்பெய்தாய்போல, எங்கும் பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்ஒத்திட்டிருந்தவா காணிரே” என்றும்,

“மண்ணும் மலையும், கடலும் உலகேழும் உண்ணும் திறந்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு வண்ணமெழில்கொள் மகரக் குழையிவை, திண்ணமிருந்தவா காணிரே என்றும் பாடி சிறப்பிக்கிறார்.”

பாரதி தனது கண்ணன் பாட்டுகளில், “சாத்திரம் கோடி வைத்தாள், அவை தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்” என்றும், "வேதங்கள் கோத்து வைத்தான், அந்த வேதங்கள் மனிதர் தம்மொழியில் இல்லை” என்றும் “கூலிமிகக் கேட்பார், கொடுத்ததெலாம் தாம் மறப்பார்” என்றும்