பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 175

அடக்கி வைத்திருக்கிறேன். எனவே என்னை விடப் புகழ் பெற்றோர்

யாருமில்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.

“என்னில் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்

றெண்ணில் மிகு புகழேன் யானல்லா என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலம்

பெருஞ்சோதிக்கென் னெஞ்சாட் பெற்று!”

என்றும்

"பெற்றதாய் நீயே, பிறப்பித்த தந்தை நீ மற்றையாரா வாரும் நீபேசில் - எற்றேயோ மாய! மாமாயவளை மாய முலைவாய் வைத்த நீயம்மா, காட்டும் நெறி"

என்றும் ஆழ்வார் பாடுகிறார்

கண்ணா! என்னை விட்டு நீங்கப் பார்க்கிறாயா? உன்னை

விடமாட்டேன் என்று கூறி,

“நெறி காட்டி நீக்குதியோ, நின்பால் கருமா முறிமேனி காட்டுதியோ மேனாள்-அறியாமை என் செய்வானெண்ணினாய் கண்ணனே ஈதுரையாய்

என் செய்தால் என்படோம் யாம்?”

என்று பாடுகிறார்.

கண்ணனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவைகளை வாழ்த்துவேன். அதைவிட வேறு எந்த உபதேசத்தையும்

கேட்கமாட்டேன் என்று ஆழ்வார் பேசிக் கொண்டு, r