பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 183 அல்லல்கள் அகலும். துக்கமும் தளர்ச்சியும் இருக்காது. கேடின்றி வாழ்வேன். மூவுலகத்தின் தலைமை எனக்குக் கிடைக்கும், என்று ஆழ்வார் பாடுகிறார்.

பாரதியும் துன்பமும் துயரமும் தீர வேண்டும், அல்லல்கள் அகல வேண்டும். இடையூறுகளும் தட்டுப்பாடுகளும் நீங்க வேண்டும் துக்கமும் தளர்ச்சியும் போக வேண்டும். கேடுகள் அனைத்தும் மாய வேண்டும். உலகத் தலைமை நமக்குக் கிட்ட வேண்டும் என்று பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார்.

உலகில் எதைக் கண்டாலும் அதைத் திருமாலை, கண்ணனைக் கண்டது போல, ஆழ்வார் காண்பதாகத் தன்மகள் அவ்வாறு காண்பதாகத்தாய் கூறுவதாக இனிய பாடல்களை ஆழ்வார் பாடுகிறார்.

" நின்ற குன்றத்தினை நோக்கி

நேடுமாலே வா என்று கூவும்

நன்று பெய்யும் மழை காணில்

நாரணன் வந்தான் என்றும்,”

“கூத்தர் குட மெடுத்தாடில்

கோவிந்தனாம் என ஒடும் வாய்த்த குழலோசை கேட்கில்

மாயவன் என்றுமையாக்கும் ஆய்ச்சிகள் வெண்ணெய்கள் காணில் அவனுண்ட வெண்ணெயிதென்றும், நிறுசெவ்வேயிடக் காணில்

நெடுமால் அடியார் என்றோடும்