பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் 184

நாறுதுளாய் மலர் காணில்

நாரணன் கண்ணியி தென்னும்”

" திருவுடை மன்னரைக் காணில்

திருமாலைக் கண்டேனே என்னும்

உருவுடை வண்ணங்கள் காணில்

உலகளந்தான் என்று துள்ளும்

கருவுடைத்தே வில்களெல்லாம்,

கடல் வண்ணன் கோயிலே என்னும்

விரும்பிப் பகைவரைக் காணில்

வியலிடம் உண்டானே என்னும் கரும்பெரும் மேகங்கள் காணில்

கண்ணன் என்றேறப் பறக்கும் பெரும்புல ஆநிரை காணில்

பிரானுளன் என்று பின்செல்லும்,”

என்றெல்லாம் கண்ணன் காட்சியை ஆழ்வார் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.

கண்ணனைப் பாடுகிறேன். அவன் இருப்பைக் கண்டு இன்புறுகிறேன். எனக்கு ஒரு குறையும் இல்லை. என்னைப் பிடித்த நோய்கள் எல்லாம் அழிந்து விட்டன. மெய் மறந்தேன். தீவினைகள்

அழிந்தன. எனக்கு இனி எந்தக் குறையுமில்லை. எல்லையில்லாத இன்பத்தையடைந்தேன் என்றெல்லாம் பாடுகிறார்.

கண்ணன் விரும்பாத நிறமும், நெஞ்சும், அடக்கமும் தளிர் நிறமும், அறிவும் கிளர் ஒளியும், வரிவளையும், மேகலையும், இவ்வுடம்பும் ஆத்மாவும் வேண்டாம் என்று தலைவி கூறுவதாக அருமையான பாடல்களை ஆழ்வார் பாடுகிறார்.