பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1.தோற்றுவாய்

19



கண்ணன் என்னும் அரசன், “வேரும் வேரடி மண்ணும் இல்லாமலே வெந்து போகப் பகைமை பொசுக்குவான், பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள் பட்ட துன்பங்களைக் கணத்திடை மாற்றுவான்” என்றும், “உலகினில் வேண்டிய தொழில் எலாம் ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ ” என்றும், “சாத்திரங்கள் பல தேடினேன், அங்கு சங்கையில்லாதன சங்கையாம்” என்றும் கண்ணம்மாவிடம், " உன் கண்ணில் நீர்வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" என்றும், கண்ணன் என்னும் காதலனிடம், “உணவு செல்லவில்லை சகியே உறக்கம் கொள்ளவில்லை, பாலும் கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி’ என்றும் “சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ? என்றும், “நெரித்த திரைக் கடலில் நின் முகம் கண்டேன், நீல விசும்பினிடை நின் முகம் கண்டேன்,” என்றும் “சொல்லித் தெரிவதில்லை, மன்மதக் கலை” என்றும் “பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு ” வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு என்றும், இன்னும் துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச் சுகமருளல் வேண்டும் என்றும் "துன்பம் இனி இல்லை சோர்வில்லை, தோற்பில்லை அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நின்னைச் சரணடைந்தேன் என்றும் பாரதி கண்ணனிடம் கண்ணம்மாவிடம் கூறும் கருத்து மிக்க பாடல்கள் நாம் படிக்கப்படிக்க நம்மை முழுமனிதனாக்கும். இவை என்றென்றும் நிலை நிற்கும் கருத்துக் கருவூலங்களும் தமிழ் சுவைச் சொற்களுமாகும்.

ஆண்டவனுக்கே பல்லாண்டு பாடிய பெருமை ஆழ்வார்களுக்கே உண்டு. அதனால் தான் வில்லிபுத்தூர் விஷ்ணுசித்தர் பெரியாழ்வார் என்று பெயர் பெற்றார். திருமால் காத்தல் கடவுள் என்று பெயர் பெற்றவராகும். ஆயினும் முத்தொழில்களுக்கும் மூலப்பொருளாகவே அவ்வுலக நாயகனைக் கம்ப நாட்டாழ்வார் குறிப்பிட்டுள்ளார். ஆக்கலும் நிலை பெறுத்தலும்