பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 189

மண்ணும் விண்ணும் மகிழ்வெய்திட வாராய் என்று கூவியழைக்கிறார். அம்மானே! உயிர் காப்போனே! பெருமானே! எங்கும் நிறைந்தவனே, மாயோனே! உலகுக்கு உயிரானவனே! சோதி மூர்த்தி என்றெல்லாம் கூவி அழைத்துக் கூப்பிடுகிறார்.

ஆழ்வார் நாயகி பாவத்திலிருந்து கண்ணனின் அழகை, கண்ணபிரானின் திருக் கண்கள், திருமூக்கு, பவளவாய், புருவம், அவனுடைய புன்முறுவல், திருச்செவிகள், திருநுதல், திருமுகம், திருக்குழல், திருமுடி, ஆகியவற்றின் அழகை ஆழ்ந்து அனுபவித்துப் பாடுகிறார். உலகை அறிவதில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் பங்கு மிக முக்கியமானது. இவற்றை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி, ஒரு முனைப்படுத்தி, பகுத்தறிவதன் மூலம் உலகைப் பற்றிய பட்டறிவு தொட்டறிவு பகுத்தறிவு விரிவுபடுகிறது. ஆழ்வார் கண்ணபிரானின் அங்கக் கூறுகளின் அழகை உணர்ந்து அவைகளைப் பற்றிக் கூறும்போது, அவைகளின் செயல்திறன்களின் சிறப்பையும் மனதில் கொண்டு பேசுகிறார், பாடுகிறார்.

“எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல்” என்று பாரதி கூறுகிறார். அத்துடன், அவர்,

பண்டைச் சிறுமைகள் போக்கி

என்னாவில் பழுத்த சுவைத்

தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி

மேவிடச் செய்குவை யே

என்று பாடுகிறார். ஆண்டவனை வேண்டுகிறார்.

என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய

அன்றைக் கன்றென்னைத் தன்னாக்கி யென்னாய்

தன்னை