பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் s 192

ஒடித் திரியும் யோகிகளும்

உளருமில்லை யல்லரே” என்றும்,

“உளரும் இல்லையல்லராய்

உளராயில்லை யாகியே!

உளரெம் மொருவர் அவர் வந்தென்

உள்ளத்துள்ளே உறைகின்றார்

வளரும் பிறையும் தேய்பிறையும்

போல அசைவும் ஆக்கமும் வளரும் சுடரும் இருளும் போல்

தெருளும் மருளும் மாய்த் தோமே! "

எனவும் பாடுகிறார்.

ஆழ்வார்கள் காலத்தில் பல சமயங்களும், சமய வேறுபாடுகளும் சமயச் சண்டைகளும் மோதல்களும் இருந்தன. சமயப் பிணக்குகள் ஏராளமாக நிலவியிருந்தன. நம்மாழ்வார் இந்த வேறுபாடுகளைத் தவிர்த்து நல்லிணக்கம் காணவே விரும்பினார். "தானும் சிவனும், பிரமனும், ஆகிப்பிணைத்த" என்று வறியுள்ளதையொட்டி, "அயனாம், சிவனாம், திருமாலால் அருளப்பட்ட சடகோபன்' என்றும் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

குட்ட நாட்டுத் திருப்புலியூரில் எழுந்தருளியுள்ள கண்ணபிரானை நினைந்து அவருடன் இரண்டறக் கலந்து விட்டதாக ஆழ்வார் பாடும் பாடல்கள் கருத்தாழமும் இன்பச் சுவையும் நிரம்பியவை. திரும்புலியூரின் செழிப்பைப் பற்றி, தாமரைக் காடுகளும், புன்னைப் பொழில்களும் சூழ்ந்த, மணி மாடங்கள் நிறைந்த ஊர்வளம், ஏர்வளம், சீர்வளம் நிரம்பிய சோலைகள் நிறைந்த கரும்பும், நெல்லும் சூழ்ந்த திருப்புலியூர் என்று குறிப்பிடுகிறார். அங்கு வாழும்