பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 193

மக்கள் சீரும் சிறப்புமாய் ஆடைகளும் அணிகளும் நிறைந்தவர்களாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள், என்றும் குறிப்பிடுகிறார். அத்தகைய திருப்புலியூரில் வாழும் செல்வக் கண்ணனுடன் ஆழ்வார், தன்னைப் பாராங்குச நாயகியாகப் பாவித்து இணைந்துள்ளதாக வரும் பாடல்கள் மிக அருமையானவை.

சுற்றத்தை நம்பிப் பலன் இல்லை. கண்ணனை நம்புவதே உய்யும் வழி என்னும் கருத்து நிறைந்த பாடல் வாழ்க்கை அனுபவங்களைத் தெளிவு படக் கூறுவதாக அமைந்துள்ளன.

“கொண்ட பெண்டிர் மக்கள்

உற்றார் சுற்றத்தவர் பிறரும்

கண்ட தோடு பட்ட தல்லால்

காதல் மற்றியாது மில்லை” எனவும்,

"துணையும் சார்வுமாகு

வார் போல் சுற்றத்தவர் பிறரும்

அணைய வந்த ஆக்கமுண்டேல்

அட்டைகள் போல் சுவைப்பர்” எனவும்

"பொருள் கையுண்டாயச் செல்லக்

காணில் போற்றியென் றேற்றெழுவர் இருள் கொள் துன்பத்தின்மை

காணில் என்னே என்பாருமில்லை”

என்றெல்லாம் மனம் கசிந்து உள்ளம் உருகிக் குறிப்பிட்டு,

“கண்ணன் அல்லால் இல்லை

கண்டீர் சரணது நிற்க வந்து