பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 199

களவு வேண்டேன், காதல் வேண்டினேன்

வேண்டாதனைத்தையும் நீக்கி

வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே.”

என்று கண்ணன் உள்ளிட்ட எல்லாக் கடவுளர்களையும் இயற்கை தெய்வத்தையும் சேர்த்து வேண்டுகிறார்.

பாரதி ஒரு கனவு காண்கிறார். அதில் அவருக்கு ஆரிய

தரிசனம் கிடைக்கிறது. அதன் பகுதியாக கிருஷ்ணர்ஜுன தரிசனம் முன்வருகிறது.

"கண்ணனைக் கண்டேன் - எங்கள்

கண்ணனைக் கண்டேன்

வண்ணனை ஞான மலையினைக் கண்டேன்

"சேனைகள் தோன்றும் - வெள்ளச் சேனைகள் தோன்றும் - பரி

யானையும் தேரும் அளவில தோன்றும்,

"கண்ணனற்றேரில் - நீலக் கண்ணனற்றேரில், - மிக

எண்ணயர்ந்தானோர் இளைஞனைக் கண்டேன்,

என்று அந்த அற்புதமான காட்சியைப் பாரதி தனது உயிர்த்துடிப்பான கவிதை வரிகளில் குறிப்பிடுகிறார். அடுத்து வரும் கவிதை வரிகளில் கீதையின் சாரத்தையே வியக்கத் தக்கவகையில் விளக்கிக் கூறிவிட்டார்.

தேரில் அமர்ந்திருந்த கண்ணன் கூறிய சொற்களைப் பாரதி கேட்டதாகக் குறிப்பிட்டுப் பாடுகிறார்.