பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 200

“பெற்றதென் பேறே - செவி பெற்றதென் பேறே - அந்தக் கொற்றவன் சொற்கள் செவியுறக்

கொண்டேன் என்று கூறுகிறார். “சுற்றம் கொல்வேனோ - என்றன் சுற்றம் கொல்வேனோ - கிளை அற்றபின் செய்யும் அரசு மோர் அரசோ?

என்று புலம்பும் விஜயன் கூற்றுக்குக் கண்ணன் பதில்

“வில்லினை எடடா - கையில்

வில்லினை எடடா அந்தப் புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா

என்று தொடங்கி,

'வாடி நில்லாதே - மனம் வாடி நில்லாதே - வெறும் பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே!

“ஒன்றுளதுண்மை - என்றும் ஒன்றுளதுண்மை - அதைக்

கொன்றிடொணாது, குதைத்தலொண்ணாது,

“துன்பமும் இல்லை - கொடுந்

துன்பமும் இல்லை - அதில் இன்பமும் இல்லை, பிறப்பிறப்பில்லை.