பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 201

"படைகளும் தீண்டா - அதைப் படைகளும் தீண்டா - அனல்

கடவுமாண்ணாது, புனல் நனையாது

" செய்தல் உன் கடனே - அறஞ் செய்தல் உன் கடனே- அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே

என்று கூறி பாடலை முடிக்கிறார்.

கண்ணன் பிறப்பைப் பற்றி விவரித்துப் பாரதி பாடுகிறார்.

“கண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான் - இந்தக் காற்றதை யெட்டுத் திசையிலும் கூறிடும்

"திண்ணமுடையான் - மணி வண்ணமுடையான் - உயர் தேவர்தலைவன் புவிமிசைத் தோன்றினான்” என்று பாடுகிறார்.

கண்ணன் பிறப்பைத் தொடர்ந்து பாரினில் துயர் நீங்கிடும் என்றும், இனி எந்தக் குறைவும் இல்லை என்றும், வேதம் துணையுண்டு என்றும், அக்கினி வந்தான் என்றும், அவன், இருள் பெய்மைக் கலியை மடித்தான், சூரியன், இந்திரன், வாயு, மருத்துகள் திரளாய் வந்து நிறைந்து பாவி அசுரர்களை வீழ்த்தினர் எனவும், கங்கையும், கலை மங்கையும், காளி பராசக்தியும், செங்கமலத்தாளும்,

திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனர் என்றும் மிக அழகாகப் பாடுகிறார்.