பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 202

i வருவாய், வருவாய், வருவாய் கண்ணா என்றும், எனது அறிவினில் ஒளிர்வாய் என்றும்; எனது ஆவியில் இணைவாய் என்றும், எனது இதயத்தில் அமர்வாய் என்றும் என்னுள் கருவாய் வளர்வாய் என்றெல்லாம் பாடுகிறார்.

காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும், நோயிலே படுப்பதும், நோன்பிலே உயிர்ப்பதும், காற்றிலே குறிர்ந்ததும், கனலிலே சுடுவதும், சேற்றிலே குழப்பலும், திக்கிலே தெளிந்ததும் இவையெல்லாம் கண்ண பெருமானே என்று பாடுகிறார்.

எளியர் தம்மைக் காப்பதும், போற்றினோர்ைக் காப்பதும், பொய்யர் தம்மை மாய்ப்பதும் கண்ண பெருமானே என்றும் பாடுகிறார்.

பாரதி ஒருவரே, கண்ணனைக் கண்ணம்மாவாக பாவித்துப் பாடியுள்ளார். அது கண்ணன் மீது அவருக்குள்ள பேதமில்லாத ஆழ்ந்த ஈடுபாட்டைக் குறிக்கிறது. கண்ணம்மாவை அங்கம் அங்கமாக வர்ணித்து அவர் பாடுகிறார்.

கண்ணம்மாவின் புன்னகை புது ரோஜாப்பூவென்றும், விழி இந்திர நீலப்பூவென்றும், முகம் செந்தாமரைப் பூவென்றும், நுதல் பாலசூரியன் என்றும் பாடுகிறார். =

கண்ணம்மாவின் எழில் மின்னலை நேர்க்கும் என்றும் புருவங்கள் மதன்விற்கள் எனவும், செறிகுழல் திங்களை மூடிய பாம்பினைப் போலவென்றும் வாக்கு ஆனந்த ஊற்று எனவும், மதுரவாய் அமிர்தம் எனவும், அவளது மென்குரல் சரஸ்வதியின் வீணை எனவும் சாயல் அரம்பையெனவும், சதுர் அயிராணி எனவும் பாடுகிறார்.

இங்கித நாத நிலைய மிருசெவி

சங்க நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்