பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 203

மங்களக்கைகள் மகாசக்தி வாசம்

வயிறாலிலை இடை அமிர்தவீடு

"சங்கரனைத் தாங்கு நந்திபத சதுரம்

தாமரையிருந்தால் லகூகிமி பீடம்,

“பொங்கித்ததும் பித்திசையெங்கும் பாயும்

புத்தன்பும் ஞாலமும் மெய்த்திருக் கோலம்

எங்கள் கண்ணம்மா என்றெல்லாம் பாடுகிறார்.

பீடத்தில் ஏறிக் கொண்டாள் - மனப்

பீடத்தில் ஏறிக் கொண்டாள் கண்ணம்மா

என்று பாடுகிறார்.

“நின்னையேரதி யென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா என்றும் தன்னையே சகியென்று சரணமெய்தினேன் எனவும்

பாடுகிறார். கண்ணம்மா, கண்ணம்மா என்றும் குறிப்பிடும் பாரதியின் பாடல்கள் நெஞ்சை நெகிழ்விப்பனவாகும்.

“காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் எனத் தொடங்கும் அருமையானதொரு இனிய பாடல் நம்மை மயக்குவதாகும். நமது உள்ளத்தை உருக்குவதாகும். பாரதியின் பெயரையும் புகழையும் நாடெங்கும் உலகெங்கும் பரப்புவதாகும்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்

காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமு

துற்றினையொத்த இதழ்களும் - நில