பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 205

" தருமே நிதியும் பெருமை புகழும்

கருமா மேனிப் பெருமானிங்கே”

“இங்கே யமரர் சங்கம் தோன்றும்

மங்கும் தீமை, பொங்கும் நலமே!”

“நலமே நாடிற் புலவிர் பாடீர்

நிலமா மகளின் தலைவன் புகழே ”

"புகழ்வீர் கண்ணன் தகைசேரமரர்

தொகையோட சுரப்பகை தீர்ப்பதையே”

"தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை

ஆர்ப்பாரமரர் பார்ப்பார் தவமே”

“தவறாதுணர்வீர் புவியீர்மாலும்

சிவனும் வானோர் எவரும் ஒன்றே!”

“ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி என்றும் திகழும் குன்றா வொளியே!”

என்று அருமையாகப் பாடுகிறார்.

“போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்

போலுவந்தானும் அவன் - நன்னெஞ்சே

நேருக்கருச்சுனன் தேரில் கசை கொண்டு

நின்றதும் கண்ணனன்றோ - நன்னெஞ்சே

என்று உருக்கமாப் பாடுகிறார்.