பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 206

பாரதியாரின் பாடல் தொகுப்பில் தேச பக்திப் பாடல்கள் ஒரு.

முக்கிய பகுதி என்பதை அனைவரும் அறிந்ததேயாகும். அப்பாடல்கள் வெளியிட்ட போது அதன் முன்னுரையில் சமர்ப்பணமாகக் கீழ்க் கண்டவாறு பாரதி குறிப்பிடுகிறார்.

“று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலையை விளக்கிய தொப்ப எனக்கு பாரத தேவியின் சம்பூரண ரூபத்தைக் காட்டி ஸ்வதேசபக்தி உபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதி கண்ணனை நினைக்கும் போதெல்லாம் கீதை உபதேசங்களையும் சேர்த்தே காண்கிறார். பாரதக் கதையும் அதில் கண்ணனின் அருஞ்செயல்களும் கீதை உபதேசமும் பாரதியின் உள்ளத்தில் மிகுந்த தாக்கங்களை உண்டாக்கியிருப்பதைக் காண்கிறோம்.

“பாரத மாதா” என்றும் தலைப்பிலான பாடலில் :

“போர்க் களத்தே பரஞானமெய்க் கீதை

புகன்றதெவருடை வாய்? - பகை

தீர்க்கத்திறந்தரு பேரினள் பாரத

தேவி மலர்த்திருவாய்"

என்று போற்றிப் பாடியுள்ளார்.

சத்ரபதி சிவாஜி தனது சைன்யத்திற்குக் கூறுவதாக வரும் பாடலில்,

"பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்

வீமனும் துரோணனும் விட்டு மன்றானும்