பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 207

ராமனும் வேறுள இருந்திறல் வீரரும்

நற்றுணை புரிவர்” என்று குறிப்பிடுகிறார்.

அதே பாடலில், பார்த்தன் தன் எதிரில் நிற்கும் தனது உறவினர் கருதி சோர்ந்து நின்ற போது கண்ணன் கூறுவதாக.

உண்மையை அறியாய், உறவையே கருதிப்

பெண்மை கொண்டு ஏதோ பிதற்றி நிற்கின்றாய்,

வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்

நெஞ்சகத்தருக் குடை நீசர்கள் - இன்னோர்,

தம்மோடு பிறந்த சகோதரராயினும்

வெம்மையோ டொறுத்தல் வீரர் தம் செயலாம்,

என்று கீதையின் கருத்தைக் குறிப்பிடுவதைக காணலாம்.

லஜபதிராய் பிரலாபம் என்னும் பாடலில்,

"நல்லறத்தை நாட்டுதற்கு நம்பெருமான்

கெளரவராம் புல்லரைச் செற்றாழ்த்த --

புனிதப் பெருநாடு" என்று பாஞ்சாலத்தைக் രൂിക്കെണ്.

அறத்தை நிலை நாட்டுவதும் கண்ணனுடைய அருஞ்செயல் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

கிருஷ்ணன் மீது ஸ்துதி என்னும் பாடலில் கண்ணனை வண்ங்கி வேண்டி வரம் கேட்கிறார். நல்வாழ்வும், கல்வியும், வீரமும், இப்புவியாட்சியும் வெற்றியும் புகழும் தரவேண்டும்மெனக் கேட்கிறார்.

வேதவானில் விளங்கி, அறஞ்செய்மின்

சாதல் நேரினும் சத்தியம் பூணுமின்