பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 213

"கேட்ட பொழுதில் பொருள் கொடுப்பான் சொல்லுங்

கேலி பொறுத்திடுவான் - எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுகள் பாடியும்

ஆறுதல் செய்திடுவான் - என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினையி ஃதென்று

நான் சொல்லு முன்னுணர்வான் - அன்பர்

கூட்டத்திலே இந்தக் கண்ணனைப் போலன்பு

கொண்டவர் வேறுளரோ?

என்றும் பாடுகிறார்.

எனது உள்ளத்தில் கருவம் கொண்டால் ஓங்கியடிப்பான். கள்ளங்கபடமான வார்த்தைகள் சொன்னால் காறி உமிழ்வான். ஒரு பள்ளத்தில் நீண்ட நாட்களாக நிறைந்து நிற்கும் அழுகிய பாசத்துடன் உள்ள தேங்கிய தண்ணிரை வெள்ளம் வந்தால் அதை அளிரை அடித்துக் கொண்டு போய் சுத்தம் செய்துவிடும் அது போலக் கண்ணன் எனக்கு அருள் வார்த்தைகள் கூறி எனது மெலிவைத் தவிர்த்து விடுவான் என்று கூறுகிறார்.

"உள்ளத்திலே கருவம் கொண்ட போதினில்

ஓங்கியடித்திடுவான் - நெஞ்சில்,

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை

சொன்னால் அங்கு

காறி உமிழ்ந்திடுவான் - சிறு

பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட

பாசியை எற்றிவிடும் - பெரு