பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 217

பாரதிக்குக் காட்சியளிக்கிறாள். கண்ணன் என்னும் பாரத அன்னை தனது உயிரெனும் முலையிலிருந்து உணர்வெனும் பாலை எனது வாயில் ஊட்டுகிறாள் என்று கவிஞர் கூறுகிறார். என்னைக் கண்ணன் எனும் தாய் கட்டிப்பிடித்துக் கைகளில் அனைத்து மடியில் அமர்த்தித் தட்டிக் கொடுத்துப் பலபல கதைகளைச் சொல்லி என்னை மகிழ வைத்தாள்; என்று பாரதி கூறுவது நமது உணர்வை உலுக்கி விடுகிறது. நாம் எல்லோரும் பாரதத் தாயின் பிள்ளைகள் என்னும் பேருண்மையை, அந்த அன்னை நம்மையெல்லாம் அறவனைத்து ஆதரித்துக் கொண்டிருப்பதைக் கவிஞர் தனது மிக அற்புதமான கவிதை மூலம் நினைவூட்டுகிறார்.

'உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால், வண்ணமுற வைத்தெனக்கே - என்றன் வாயினிற் கொண்டுட்டு மோர் வண்மையுடையாள் கண்ணனெனும் பெயருடையாள் - என்னைக் கட்டி நிறைவாள் எனும் தன் கையிலணைத்து மண்எனும் உந்தன் மடியில் வைத்தே - பல

மாய முறுங்கதை சொல்லி மனங்களிப்பாள்

என்று பாரதி பாடுகிறார்.

பாரதத் தாய் எழுதியுள்ள கதைகள் பலப்பல. இன்ப மயமான பல கதைகள், ஏற்றம் என்றும் வெற்றி என்றும் சில கதைகள், துன்பம் எனச் சில அவலக் கதைகள், தோல்வி என்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள், “இவ்வாறு எனது பருவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு பல கதைகளை அன்புடன் எனக்குச் சொல்லிவருவாள். அந்த அற்புதமான கதைகளைக் கேட்ட நான்