பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 218

பரவசமடைவேன்” என்று பாரதி கூறுகிறார். பாரதத் திருநாட்டில் மக்களிடம் உலவி வரும் எண்ணற்ற கதைகளையே பாரதி இவ்வாறு குறிப்பிடுகிறார். அவையெல்லாம் பாரத அன்னையின் கண்ணன் என்னும் தாயின் கதைகள். அக்கதைகளைக் கேட்டுக்கேட்டு பாரதியுடன் சேர்ந்து பாரத மக்கள் அனைவரும் பரவசமடைகிறார்கள், என்று பாரதி குறிப்பிடுவது நம்மையும் பரவசமடையச் செய்கிறது.

“ இன்பமெனச் சில கதைகள் - எனக் கேற்றமென்றும், வெற்றி யென்றும் சில கதைகள், துன்பமெனச் சில கதைகள் - கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சி யென்றும் சில கதைகள், என்பருவம், என்றன் விருப்பம் - எனும் இவற்றினுக் கிணங்க என்னுளமறிந்தே அன்போடு அவள் சொல்லி வருவாள் - அதில்

அற்புத முண்டாய்ப் பரவசமடைவேன்”

என்று பாரதி அற்புதமாகப் பாடுகிறார்.

விந்தை விந்தையாகப் பலவிதமான காட்சிகளையும் பொம்மைகளையும் எனக்குக் காட்டி மகிழ்விப்பான். சந்திரன், அதன் பால் போன்ற நிலவு, மந்தை மந்தையாக மேகக் கூட்டம், அதன் மழை, சூரியன் அதன் ஒளி முகம், வானத்து மீன்கள் கானத்து மலைகள் நல்ல நல்ல நதிகள், அவை சேரும் விரிகடல், அதன் அலை கடல், அவை ஒம் என ஒலித்திடும் ஒசை, சோலைகள் காவினங்கள், மலர்கள், அவைகளின் இனிய மணம், கனி வகைகள், முதலியவற்றை எனது அன்னையாகிய கண்ணன், கோடி கோடியாய்க் குவித்து வைத்து பொம்மைகளாக அவைகளை எனக்குக் காட்டி, என்னை மகிழ்வித்தாள்.