பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 220

என்றும்,

எல்லையதில் காணுவதில்லை - அலை

எற்றிதுரைகக்கியொரு பாட்டிசைக்கும்,

ஒல்லெனும் அப்பாட்டினிலே - அம்மை

ஒம் எனும் பெயர் என்றும் ஒலித்திடுங்காண்,”

“சோலைகள் காவினங்கள் - அங்கு

சூழ்தரும் பலநிற மணி மலர்கள்,

சாலவும் இனியனவாய், அங்கு

தருக்களில் தூங்கிடும் கனிவகைகள்

ஞாலம் முற்றிலும் நிறைந்தே - மிக

நயந்தரு பொம்மைகள் எனக்கெனவே

கோலமும் சுவையுமுற - அவள்

கோடி பல் கோடிகள் குவித்து வைத்தாள்”

என்றெல்லாம் மகிழ்ச்சியுடன் பாடுகிறார்.

தின்றிடப் பண்டங்கள், செவியினிக்கக் கேட்க நல்ல பாட்டுகள், பழகுவதற்குரிய தோழர்கள், நல்ல காதலுக்குரிய நாளியர், இறகுடைப் பறவைகள், நிலத்தில் திரியும் விலங்குகள், ஊர்வனகள், கடலில் நிறைந்த மீன்வகைகள் எனப்பல தோழர்களை அன்னை கண்ணன்

எனக்கு

நிறைவுறக் கொடுத்து என்னை மகிழ்வித்தாள் என்று

கூறுகிறார் பாரதியார்.

தின்றிடப் பண்டங்களும் - செவி தெவிட்டறக் கேட்க நற்பாட்டுகளும் ஒன்றுறப் பழகுதற்கே - அறி