பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 221 வுடைமெய்த் தோழரும் அவள் கொடுத்தான் கொன்றிடும் என இனிதாய் - இன்பக் கொடு நெருப்பாய் அனற்சுவையமுதாய் நன்றியல் காதலுக்கே - இந்த

நாரியர்தமை எனைச் சூழ வைத்தான்”

“ இறகுடைப் பறவைகளும் - நிலந் திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் அறைகடல் நிறைந்திடவே - எண்ணில் அமைந்திடற்கரிய பல்வகைப்படவே சுறவுகள், மீன்வகைகள் - எனத் தோழர்கள் பலரும் இங்கெனக் களித்தாள் நிறைவுற இன்பம் வைத்தாள் - அதை நினைக்கவும் முழுதிலும் கூடுதில்லை”

என்று பாரதி பாடுகிறார்.

பாரதத் தாய் கோடிக் கணக்கான நல்ல சிறந்த சாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த சாத்திரங்களில் மிக உயர்ந்த ஞானத்தையும் வைத்துள்ளாள். அத்துடன் அவற்றில் வேடிக்கையாக நகைப்பதற்குச் சில பொய் வேதங்களும் மதக் கொலைகளும் அரசர்களுடைய கூத்துக்களும் மூத்தவர்களின் பொய் நடையும் கொண்ட கற்பனைக் கதைகளும் கோர்த்து வைத்துள்ளாள் என்று பாரதி தனக்கே உரித்தான கருத்து நிறைந்த கவிதை வரிகளைப் படைத்துள்ளார்.

“சாத்திரங்கோடி வைத்தாள் - அவை

தம்மினுமுயர்ந்த தோர் ஞானம் வைத்தான்