பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 222

மீத்திடும் போதினிலே - நான் வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே கோத்த பொய் வேதங்களும் - மதக் கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் மூத்தவர் பொய் நடையும் - இள

மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்”

என்று சிறந்த கருத்துக்கள் நிறைந்த இக்கவிதை வரிகளைக் கூறியுள்ளார்.

இத்தகைய அன்னைக் கண்ணனின் அருளைப் புகழ்ந்து பாடும் தொழிலைச் செய்வேன். எனக்கு நீண்ட வாழ்வும் புகழும் பெருமையும் அவள் கொடுப்பாள் என்று இப்பாடலைப் பாரதி பாடி முடிக்கிறார்.

வேண்டிய கொடுத்திடுவாள் - அவை விரும்பு முன் கொடுத்திட விரைந்திடுவாள் ஆண்டருள் புரிந்திடுவாள் - அண்ணன் அருச்சுனன் போல் என்னை ஆக்கிடுவாள் யாண்டும் எக்காலத்திலும் - அவள் இன்னருள் பாடும் நற்றொழில் புரிவேன், நீண்ட தோர் புகழ் வாழ்வும் - பிற நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்

என்று மிக அற்புதமாகப் பாடி பாரதியார்,

கண்ணன் - என் தாய் என்னும் கவிதையை முடித்துள்ளார்.