பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 224

"பூமிக்கெனை யனுப்பினாள் - அந்தப் பூத மண்டலத்தில் என் தம்பிகளுண்டு நேமித்த நெறிப்படியே . இந்த

நெடுவழியெங்கனும் நித்த முருண்டே

போமித்த ரைகளிலெல்லம் - மனம் போல விருந்தாளுபவ ரெங்களினத்தார், சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள் தந்தையவன் சரிதைகள் சிறிதுறைப்பேன்.”

என்று பாரதி கண்ணன்-என் தந்தை என்னும் அற்புதமான

பாடல்களைத் தொடங்குகிறார்.

செல்வத்திற்கோர் குறையில்லை - எந்தை

சேமித்து வைத்த பொன்னுக்கு அளவொன்றில்லை கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன் கவிதையின் இனிமையொர் கணக்கில் இல்லை. பல்வகை மாண்பினிடையே - கொஞ்சம் பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு நல்வழி செல்லுபவரை - மனம் நையும் வரை சோதனை செய் நடத்தையுண்டு.

என்று பாடுகிறார்.

செல்வத்திற்குக் குறைவேயில்லை. எல்லா வளங்களும் நிறைந்திருக்கின்றன. சேமித்து வைத்துள்ள பொன்னும் வெள்ளியும் ஏராளம். கல்வியிலும் மிகச் சிறந்தவன். அவனுடைய கவிதைகளும்

இனிமைமிக்கவை. இப்படி எல்லா வகையான மாண்புகளும்