பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 225 சிறப்புகளும் கொண்டவன். இருப்பினும் அவனிடம் சில பலவீனங்களும் உண்டு. அடிக்கடி அவனுக்குப் பயித்தியம் தோன்றும். இது எல்லா மனிதர்களிடமும் தோன்றும் பொதுவான குணம்தான். அது கண்ணனுக்கும் உண்டு. அத்துடன் நல்லவர்களைக் கடைசிவரை சோதனை செய்யும் நடத்தையும் அவனிடம் இருக்கிறது என்று மகாகவி பாரதி தன்னையும் நமது நாட்டையும் நினைந்து பாடுகிறார்.

'நாவு துணிகுவதில்லை - உண்மை நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே யாவரும் தெரிந்திடவே - எங்கள் ஈசனென்றும் கண்ணன் என்றும் சொல்லுவதுண்டு, மூவகைப் பெயர்புனைந்தே - அவன் முகமறியாதவர் சண்டை செய்வார் தேவர் குலத்தவ னென்றே - அவன் செய்தி தெரியாதவர் சிலருரைப் பார்,

'பிறந்தது மறக்குலத்தில் - அவன் பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் சிறந்தது பார்ப்பனருள்ளே - சில செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு நிறம் தனில் கருமை கொண்டான் - அவன் நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள் துறந்த நடைகளுடையான் - உங்கள் - சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்,

என்று பாரதி கருத்து மிக்க பாடல்களைப் பாடுகிறார்.