பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதங்கள் என்றவற்றுள்ளே - அவனவ் வேதத்தில் சிலசில கலந்ததுண்டு வேதங்களன்றி யொன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தைகளெல்லாம்,

'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாச முறப்புரிந்தனர் மூட மனிதர் சீலம் அறிவு தர்மம் - இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம் மேலவர் கிழவர் என்றே - வெறும் வேடத்தில் பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் - இன்று பொசுக்கி விட்டால் எவர்க்கும் நன்மை உண்டென்பான்.

என்று கண்ணன் என் தந்தை என்னும் தலைப்பில், மிகவும் அற்புதமான கருத்தாழம் மிக்க கவிதையைப் பாரதி பாடுகிறார்.

இப்பாடல்களில் வேதங்களைப் பற்றி ஒரு சிறந்த கருத்துண்மையைப் பாரதி குறிப்பிடுகிறார். பாரதி தனது பகவத் கீதைத் தமிழாக்க நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையில்

வேதங்களைப் பற்றிய ஒரு விரிவான வரலாற்று விளக்கத்தையே கூறுகிறார்.

“சம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட, வாம தேவாதி தேவரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன” என்றும், இந்த மந்திரங்கள் அல்லது சம்ஹிதைகள்