பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய, மிகப் பழைய சமஸ்திருத பாஷையில் எழுதப்பட்டிருக்கின்றன.” எனவும் சமஸ்கிருத பாஷையிலுள்ள மற்றெல்லா நூல்களும் ஒரு பாஷை, வேதம் மாத்திரம், அதாவது சம்ஹிதை அல்லது மந்திரம் மாத்திரம் தனியான பாஷையாக இருக்கிறது. வேத சமஸ்கிருதம், வேறு எந்த நூலிலும் கிடையாது என்றும், "வேத மந்திரங்களுக்குச் சரியான அர்த்தம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தற்காலத்து ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் அநேக பண்டிதர்கள் மிகவும் சிரமப் படுகிறார்கள்” என்றெல்லாம் பாரதி கூறுகிறார்.

எனவே வேதங்களைப் பற்றியும் அவைகளின் உண்மைப் பொருள்களைப் பற்றியும் தொடர்ந்து ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. மேலும் அவ்வாய்வுகள் தொடர வேண்டும். போலி விளக்கங்கள், மற்றும் போலிக் கதைகளிலிருந்து வேதங்களை விடுவிக்க வேண்டும், வேதங்களின் உண்மையான கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவைகளாக்கப் பட வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும்.

சமஸ்கிருதமே கூட மக்கள் பேசும் அல்லது மக்கள் பேசிய மொழியல்ல. அது பண்டிதர்களின் மொழியாகும். பாரத நாட்டில் உள்ள அனைத்து மொழிப் பண்டிதர்களும் சமஸ்கிருதப் பண்டித மொழியின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்கை ஆற்றியுள்ளார்கள். அம்மொழியை நம் நாட்டுப் பண்டிதர்களின் பொது மொழியாக ஒரு வளமான சிறந்த மொழியாக தனிச் சிறப்பு மிக்க மொழியாக வளர்த்திருக்கிறார்கள்.

வேதங்களைப் பொருத்தவரையில் அது சமஸ்கிருத மொழியில் இல்லை. அது பூர்வ மொழியில் அமைந்திருக்கிறது. அதை வேத மொழி என்றுதான் குறிப்பிட வேண்டும். அதற்கு இன்று நமக்குக் கிடைத்துள்ள சாயனபாஷ்யமே ஓரளவுக்குச் சரியான விளக்கம் கொடுப்பதாகும். உபநிடதங்கள் என்பது பின்னர் வந்த நூல்களாகும்.