பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H ملین =E

ASA SSASAS SSAS SSAS SSAS அவை வேத பாஷையில் இல்லை. அவை சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளன. அதை வேதாந்தம் என்றும் கூறுகிறார்கள் என்பது பாரதியின் கருத்தாகும்.

அதனால்தான் பாரதி “கண்ணன் எனது தந்தை” என்னும் தனது பாடலில் அந்த “வேதங்கள் மனிதர் தம் மொழியில் இல்லை. என்றும் "வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறும் கதைத்திரளில் அவ்வேதமில்லை என்றும், அம்மனிதர் கூறும் வேதங்களில் பல கலப்புகள் எற்பட்டுள்ளன. வென்றும், வேதங்கள் என்பது இந்த உலகத்து மக்கள் சொல்லும் மெய்யான சுத்தமான வார்த்தைகள் தான் என்றெல்லாம், பாரதி குறிப்பிடுவது பற்றி நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

நாலு குலங்கள் என்னும் குலப்பிரிவுகள் பற்றிய பாரதியின் கருத்து மிகவும் தெளிவாக அமைந்துள்ளது. வேதங்களில் சாதிகள் சாதிப் பிரிவுகள் பற்றி கூறப்படவில்லை. அவை பின்னர்தான் ஏற்பட்டிருக்கின்றன. மனு தர்மம் சாதிப்பிரிவுகளை வகுத்தது.

கண்ணன் கீதையில், “குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வருணங்களை சமைத்தேன்” என்றுதான் குறிப்பிடுகிறார். பாரதி தனது கீதைத் தமிழாக்க நூலின் முன்னுரையில், “கண்ணபிரான் மனிதருக்குள் சாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமேயன்றி எல்லா உயிர்களுக்குள்ளேயும் எவ்வித வேற்றுமையும் பாராட்டாதிருத்தலே ஞானிகளுக்கு லட்சணம் என்று சொல்லுகிறார்” என்று குறிப்பிடுகிறார்.

அதனால்தான் பாரதி தனது பாடலில் “நாலு குலங்கள்

அமைத்தான், அதை நாசமுறப்புரிந்தனர் மூட மனிதர்” என்றும், “சீலம் அறிவு தர்மம்', இவைகளில் சிறந்தவர் மனிதர்களில் சிறந்தவர்கள்