பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H = ынын һын һынан || LнLтып II пынтыгнтыгын ш יישאיי ייי-י ישעשעי-י = * =

என்றும் “ வெறும் வேடத்தில் பிறப்பினில் சாதியில்லை, என்றும் அவ்வாறு கூறும் சுவடிகள் போலிச் சுவடிகள் என்றும், அப்போலிச் சுவடிகளைப் பொசுக்கி விட்டால் எல்லோருக்கும் நன்மையுண்டென்றும் கண்ணன் கூறியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் பாரதி.

வயது முதிர்ந்து விடினும் - எந்தை வாலிபக்களை யென்றும் மாறுவதில்லை

துயரில்லை, மூப்பில்லை - என்றும் சோர்வில்லை, நோயொன்றும் தொடுவதில்லை, பயமில்லை, பரிவொன்றில்லை - எவர் பக்கமும் நின்றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை, நயம்மிகத் தெரிந்தவன் காண் - தனி நடுநின்று விதிச் செயல் கண்டு மகிழ்வான்.

"துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மை தூவென்று இகழ்ந்து சொல்லி அன்பு கனிவான், அன்பினைக் கைக்கொள் என்பான் துன்பம் அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான், என்புடைப்பட்ட பொழுதும் - நெஞ்சில் ஏக்க முறப் பொருப்பவர் தம்மையு கப்பான் இன்பத்தை எண்ணுபவர்க்கே - என்றும் இன்ப மிகத்தருவதில் இன்பமுடையான்”

என்று "கண்ணன் என் தந்தை” என்னும் கவிதையைப் பாடி முடிக்கிறார்.