பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 234

கண்ணனை நான் ஆட்கொண்டேன், கண் கொண்டேன். கண்ணன் என்னை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளன என்று பாடி முடிக்கிறார் இப்பாடலை முழுமையாகத் தொடர்ச்சியாக அப்படியே இங்கே கொடுத்துள்ளோம். இப்பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத்திரும்பப் பாடிப்பாடி மகிழலாம்.

"கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாம் தாம் மறப்பார்,

வேலை மிக வைத்திருந்தால்

வீட்டிலே தங்கிடுவார்.

" ஏனடா நீ நேற்றைக் கிங்கு

வரவில்லை யென்றால்

பானையிலே தேளிருந்து

பல்லாற் கடித்தது என்பார்,

“வீட்டிலே பெண்டாட்டி மேல்

பூதம் வந்த தென்பார்

பாட்டியார் செத்துவிட்ட

பன்னிரண்டாம் நாளென்பார்

"ஓயாமல் பொய்யுரைப்பார்,

ஒன்றுரைக்க வேறு செய்வார்,

தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்து உரைப்பார்,