பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2.உலகப் பெருவடிவம்

20


அனந்தனும் அவன் மங்கையும் அவனது ஆழியும் சங்கும் அனந்தமே. அனந்தமே உலக வடிவமும் ஆகும்.

பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாடல்கள் உலகில் தனிச்சிறப்பு பெற்றதாகும். "எல்லையொன்றின்மை” என்னும் பொருளைக் கம்பன் தனது குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைப் பாரதி சுட்டிக் காட்டுகிறார்.

திருமாலைப் பற்றிப் பாற்கடல் பள்ளியான் ஞானச்சுடர் என்று நம்மாழ்வார் கூறுகிறார். நம்மாழ்வாரின் திருவாய் மொழி வேதப் பொருளாகும். திருமாலின் ஞானவடிவை, உலகவடிவைப் பல பாடல்களிலும் குறிப்பிடுகிறார், எல்லாப் பொருள்களும் தன்னுள் ஒடுங்கி நிற்கும் ஞானப் பொருளே பாற்கடற் பள்ளியான் என்று கூறுகிறார்.

“எவரும், யாவரும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி அவர் எம் ஆழியம் பள்ளியாரே" என்று நம்மாழ்வார் திண்ணன் வீடு என்னும் தலைப்பில் கண்ணன் பெருமையைப் பற்றிக் கூறுகிறார்.

உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் கண்ணன் என்றும், கண்ணனே எல்லாப் பொருள்களும் என்றும் குறிப்பிடும் கருத்தை மிகவும் அற்புதமான முறையில் இனிய தமிழ்ச் சுவைமிக்க பாடல்களில் பாடியுள்ளார். அப்பாடல்களின் சிகரமாக " புகழும் நல்ஒருவன் என்கோ” என்று தொடங்கும் இனிய பாசுரங்கள் அமைந்துள்ளன. நம்மாழ்வார் பெருமானின் அப்பாடல்களை எத்தனை தடவை பாடினாலும் திகட்டாது, தெவிட்டாது. அப்பல் சுவைப் பாசுரம்.

"புகழுநல் ஒருவன் என்கோ

பொருவில் சீர் பூமியென்கோ