பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றுமில்லை, கண்ணன் என்பர் ஊரில் உள்ளோர் என்னை ” என்றான்

கட்டுறுதி யுள்ளவுடல் கண்ணிலே நல்ல குணம், ஒட்டுறவே நன்றாய் வுரைத்திடுஞ்சொல் ஈங்கிவற்றால் தக்கவன் என்று உள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன், மிக்கவுரை பல சொல்லி விருது பலசாற்று கிறாய்

கூலியென்ன கேட்கின்றாய் கூறுக என்றேன் ஐயனே!

தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை, நானோர் தனியாள், நரைதிரை தோன்றாவிடினும் ஆனவயதிற் களவில்லை, தேவரீர் ஆதரித்தால் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள

காதல் பெரிது எனக்குக்காசு பெரிதில்லை” யென்றான்

“ பண்டைக்காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவோ கண்டு மிகவும் களிப்புடனே நான் அவனை ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு

நாளாக நாளாகக் நம்மிடத்தே கண்ணனுக்கு

“பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால், பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணையிமை யிரண்டும் காப்பது போல் என்குடும்பம் வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்