பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் என்னை ஆட்கொள்ளக் காரணமும் உள்ளனவே என்று உள்ள முருகப் பாரதி - கண்ணன் என் சேவகன் என்னும் பாடலைப் பாடி முடிக்கிறார்.

கண்ணன் எல்லா வகையிலும் நமக்குத் துணையாக இருப்பான். நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய் இருக்கிறான்.

கண்ணன் என்னகத்தே கால் வைத்த நாள் முதலாய் செல்வம், இளமாண்பு, சீர்சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், சிவஞானம் முதலிய அனைத்து நலன்களும் ஓங்கி வருகின்றன, எண்ணம், விசாரம், கவலை எதுவுமில்லை என்று பாரதியார் இந்தக் கவிதை மூலம் நமக்குக் கூறுகிறார்.

கண்ணனிடம் பாரதிக்குள்ள ஈடுபாட்டிற்கு அளவேயில்லை. ஆழ்வார்களுக்கடுத்தபடியாகப் பாரதியைக் கண்ணனுக்கருகில் உயர்த்தி நிறுத்தலாம். பாரதி தனக்காகவல்லாமல் நாட்டிற்காக உலக கூேடிமத்திற்காக கண்ணனை சேவகனாகப் பாவித்து மிகுந்த பக்தியுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார். “எங்கிருந்தோ வந்தான்” என்னும் பாரதியின் சொற்கள் நமது உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கண்ணன் வாழ்க! பாரதி வாழ்க!

கண்ணன் என் அரசன்

அரசனுடைய, அரசு தன்னுடைய கடமை, நாட்டையும் நாட்டு மக்களையும் காத்தலாகும். அதனாலேயே அரசனுக்குக் காவலன் எனப் பெயர் ஏற்பட்டது. மக்களைக் காத்தல் என்றால், நாட்டையும் நாட்டு மக்களையும் உள்நாட்டுக் குழப்பங்களிலிருந்தும், கலகங்களிலிருந்தும், மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் புரியும் தீயசக்திகள், சமூக விரோத சக்திகளிடமிருந்தும், மக்களின் உயிரையும் உடமைகளையும் காப்பது, வனவிலங்குகளின்