பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாக்குதல்களிலிருந்து மக்களைக் காப்பது, அன்னியப் படையெடுப்புகளிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பது, இயற்கைச் சீற்றங்களிலிருந்து அதாவது புயல், பெருமழை, பெருவெள்ளம், சூரைக் காற்று வறட்சி பஞ்சம் முதலியவற்றால் ஏற்படும் சேதங்களிலிருந்து மக்களுக்கு ஏற்படும் துயர்களைத் தணிப்பது, துடைப்பது, நிவாரணங்களுக்கு ஏற்பாடு செய்வது முதலியனவாகும். இதுவே மன்னனின் முதல் கடமையாகிறது. அத்துடன் மக்களுக்கும் நாட்டிற்கும் தேவையான பொருள்களை உற்பத்தி செய்தல் அவற்றை சேகரித்து சேமித்தல், பாதுகாத்தல் வினியோகித்தல் அவைகளை நிர்வகித்தல் பார்வையிடல் சீரமைத்தல், முதலிய கடமைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்.

ஆலயங்கள் பராமரித்தல், கல்வி பெருக்குதல் மக்களின் இதர நலன்களைக் காத்தல் முதலியனவும் அரசனின், ஆட்சி நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும். தற்காலத்தில் அரசினுடைய கடமைகள் மேலும் விரிவடைந்து வருகின்றன.

படைகள் சேர்த்தல், பரிசனம் சேர்த்திடல் பணமுண்டாக்கல், ஆகியவை அரசர் தம் கடமையாக பாரதி குறிப்பிடுகிறார். ஆயர்பாடி மக்களுக்கு அண்டை நாட்டு அரசர்கள் மூலம் தொடர்ந்து படையெடுப்பு அபாயங்கள் நேர்ந்து கொண்டிருந்தன. இந்திரன், கம்சன், சிசுபாலன், இவ்வாறு பல கொடுங்கோலர்களும் பல அசுரர்களும் அரக்கிகளும் தொடர்ந்து ஆயர்பாடி மக்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தங்கள் பாதுகாப்பிற்குக் கண்ணனை எதிர்பார்த்தார்கள். கண்ணன் என்னும் அரசன் பகைமையை ஒழிப்பான் என்று மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். கண்ணன் ஒரு பக்கம் எதைப் பற்றியும் கவலைப் படாமல் கூத்துக்களிலும், பாட்டுகளிலும் காலம் கழித்தான். இடையன், வீரமில்லாதவன் அஞ்சினோன், என்றெல்லாம் வசைகள் பொழிந்தாலும் அவைகளைப் பற்றியெல்லாம் சட்டை செய்யாமல் இருந்தான். ஆயினும், மறுபக்கம்,