பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24U

காலம் வந்தபோது கண்ணன் கணத்திலே செயலில் ஈடுபட்டான் என்று பாரதி குறிப்பிடுகிறார்.

என்றும்,

என்றும்,

என்றும்

காலம்வந்து கைகூடும் போதிலோர்

கணத்திலே புதிதாக விளங்குவான்,

ஆலகால விடத்தினைப் போலவே

அகில முற்றும் அசைந்திடச் சீறுவான்

வேரும் வேரடி மண்ணும் இல்லாமலே

வெந்துபோகப் பகைமை பொசுக்குவான்

பாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள்

பட்ட துன்பம் கணத்திடை மாற்றுவான்

சக்கரத்தை எடுப்பது ஒருகணம்,

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்

இக்கணத்தில் இடைக்கண மொன்றுண்டோ

இதனுள்ளே பகைமாய்த்திட வல்லன்காண்,

பாரதி பாடுகிறார்.

அத்தகைய கண்ணன் எங்கள் அரசன். அவன் புகழினை எனது கவிதைகளில் காலமெல்லாம் போற்றுவேன். கண்ணனுடைய கோயிலின் திண்ணை வாயிலைப் பெருக்க வந்த என்னை அக்கண்ணன் தனது மந்திரியாக்கினான். நித்தமும் சோறு வேண்டி ஏவல் செய்ய வந்த என்னை பெரும் செல்வந்தனாக்கினான். வித்தைகள் பயின்றிடாத எனக்கு வேதநுட்பங்கள் விளங்கிடச்