பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ുliഖlി பாரதியும் - அ. சீனிவாசன் 243 உலகினர் வெறுப்புறும் ஒழுக்க மத்தனையும்

தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும் இகழும் மிக்கவனாய் என் மனம் வருந்த

நடந்திடல் கண்டேன்” என்று குறிப்பிடுகிறார்.

இங்கு பாரதி உலகியல் நடப்பில் உள்ள பல பழக்க வழக்கங்களையும் சாதாரண மக்களின் இயல்புகளையும் மதிப்பீடுகளையும் பற்றிச் சில அரிய கருத்துக்களைக் குறிப்பிடுகிறார்.

“கதையிலே கணவன் சொல்லினுக்கெல்லாம் எதிர்செயும் மனைவி போல” என்று குறிப்பிடுகிறார்.

நானிலத்தவர்தம், மதிப்பையும், புகழுறு வாழ்வையும் புகழையும் தெய்வமாகக் கொண்ட சிறுமதி யுடையேன் என்று குறிப்பிடுகிறார். சாதாரண மக்கள் வெறும் மதிப்பையும் புகழையும், புகழ்மிக்க வாழ்க்கையையும் (மற்றவர்கள் நம்மை போற்றிப் புகழும் வாழ்க்கை - அது போலியாகக் கூட இருக்கலாம் அப்படிப்பட்ட வாழ்க்கையை) விரும்புகிறார்கள் என்பது உலகியலாகும்.

இத்தகைய உலக மக்கள் சாதாரண உணர்விலேயே இதர மக்களையும் பள்ர்க்கிறார்கள். அப்படியாகவே அவர்கள் கண்ணனையும் காண்கிறார்கள் எனக் கருதுகிறார் பாரதி அவர் மேலும் கூறுகிறார் . . . . . நாட்பட நாட்படக் கண்ணனும் தனது கழிபடு நடையில் மிஞ்சுவனாகி, வீதியிற் பெரியோர் கிழவியரெல்லாம் கிறுக்கன் என்றிவனை இகழ்ச்சியோடு, இரக்கமும் உற்று ஏளனம் புரியும் நிலையும் வந்திட்டான்” என்று குறிப்பிட்டுச் சாதாரண மக்கள் கண்ணனைப் பற்றிக் குறைவாகப் பேசுவதாகக் கற்பித்துப் பாரதி: