பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 244

'நெஞ்சிலே எனக்குத் தோன்றிய வருத்தம் சொல்லிடப்படாது” என்று குறிப்பிடுகிறார்.

நாட்டில் பல இளைஞர்களின் நிலையும் மற்றவர்களுடைய ஏளனத்திற்கு உரியது போல இருப்பதை நினைந்து பாரதி வருத்தமடைகிறார் எனவே,

“முத்தனாக்கிட நான் முயன்றதோர் இளைஞன், பித்த னென்றுலகினர் பேசிய பேச்சு என் நெஞ்சினை அறுத்தது” என்று கூறிப் பாரதி மிகவும் வருத்தமடைந்துப் பேசுகிறார்.

எனினும் தொடர்ந்து விடா முயற்சியுடன்,

“------- நீதிகள் பலவும்

தந்திரம் பலவும், சாத்திரம் பலவும்

சொல்லி கண்ணனை நான்

தொளைத்திடல் ஆயினேன்”

என்றும்,

" தேவ நிலையிலே சேர்ந்திடா விடினும் மானுடம் தவறி மடிவுறா வண்ணம்

கண்ணனை நானும் காத்திட விரும்பித்

தியெனக் கொதித்துச் சின மொழி யுரைத்தும்

சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்

கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்

எத்தனை வகையிலோ என் வழிக்கு அவனைக்

கொணர்ந்திட முயன்றேன்,