பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 245

கொள்பயன் ஒன்றில்லை” என்று கவலை கொண்டு பாரதி

கூறுகிறார்.

இதுவே எல்லா இளைஞர்களைப் பற்றியும், அவர்களிடம் அன்பு கொண்டு அவர்களை உயர்ந்த மனிதர்களாக ஆக்க முயலும் ஆசிரியர்களுடைய விருப்பமும் ஆசையும் ஆகும் என்பதைப் பாரதி தனது உள்ளத்தில் எழும் கவிதை மூலம் கூறுகிறார்.

“தேவ நிலையிலே சேர்ந்திடாவிடினும்

மானுடம் தவறி மடிவுறா வண்ணம்

என்று நிதானமாகவே காரிய சாத்திய அளவிலேயே மதிப்பிட்டு,

மானுட நிலையாவது தவறாது நிலைத்திடல் வேண்டுமென்று பாரதி கவலை கொள்கிறார், ஆனால்,

“கண்ணன் பித்தனாய்க் காட்டானாகி

எவ்வகைத் தொழிலிலும் எண்ணம் அற்றவனாய்

எவ்வகைப் பயனிலும் கருத்தி ழந்தவனாய்,

குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்

யாதோ பொருளாய் எங்ங்னோ நின்றான்”

என்று மனம் நொந்து கூறுகிறார்.

இதனால்,

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற

யான் கடும்சினமுற்று எவ்வகையானும்,

கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பான்,

எனப் பெருந்தாபமெய்தினேனாகி,