பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆழ்வார்களும் பாரதியும் - அ.சீனிவாசன்

21


திகழும் தண் பரவையென்கோ!
தீயென்கோ! வாயுவென்கோ !
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள்சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவுமாறே! "

இப்பூமியும், தண்ணீரும்,தீயும்,வாயுவும் ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களும், சூரியன், சந்திரன் ஆகிய சுடர்கள் இரண்டும் ஆகிய அனைத்தும் கண்ணனையே குறிக்கின்றன என்று கூறி மேலும் தொடர்கிறார்.

" கூவு மாறறிய மாட்டேன்
குன்றங்கள் அனைத்து மென்கோ!
மேவு சீர்மாரியென்கோ !
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல்லாவி யென்கோ!
பாவுசீர் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ணனையே!”

இவ்வுலகில் ஓங்கி நிற்கும் மலைகள் அனைத்தும், அம்மலைகளின் சுவடுகளிலும் வானம் முழுவதிலும் அசைந்து செல்லும் மேகக் கூட்டங்களும், அவை பொழியும் மழைப் பெருக்கமனைத்தும், விண்ணில் ஒளி வீசும் நட்சத்திரங்கள் அனைத்தும், நாவில் வெளிப்படும் கலைகள் அனைத்தும்,