பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆதலால்,

என்பய்ன் கருதி, எனக்கொருதுணையாய்

என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை

வேண்டிநிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே

என்னைநீ துன்பமெய்து வித்திடாமே,

இவ்வுரைக் கிணங்குவாய்! என்றேன்” என்று குறிப்பிடுகிறார்.

இதன் பின்னர், கவிதையில், கவிஞருக்கும் கண்ணனுக்கும் ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது ஒரு அபூர்வமான இலக்கிய வளம் நிறைந்த தெய்வீக உரையாடலாகும். ஆழ்ந்த கவியுள்ளம் கொண்டதாகும். இங்கு பாரதியின் கவியுள்ளம் பெருங்கடலின் ஆழத்தைக் காட்டிலும் ஆழமானது. அவருடைய சிந்தனை கைலாய மலையின் சிகரத்தைக் காட்டிலும் உயரமாக உள்ளது. கவிஞர் கூறுவதும், சீடன் மாயன் பதிலளிப்பதுமான உரையாடல் மிக எளிமையாகத் தோன்றிய போதிலும் அதன் ஆழத்தையும் உயரத்தையும் காண்பது கடினமாகத் தெரிகிறது. பாரதியின் பக்தி அதில் நிறைந்து நிற்கிறது.

“பாரதியின் வேண்டுகோளுக்கிணங்கி,

கண்ணனும் அங்ங்னமே புரிவேன் ஆயின், நின்னிடத்தே தொழில் இல்லாது யாங்ங்னம்,

சோம்பரில் இருப்பது, காரியம் ஒன்று காட்டு

வையாயின் இருப்பேன் என்றான் ”

“இவனுடைய இயல்பையும் திறனையும் கருதி” என் செய்யுளையெல்லாம் நல்லதோர் பிரதியில் நாள் தோறும் எழுதி கொடுத்திடும் தொழிலினைக் கொள்ளுதி” என்றேன்.