பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது கவிஞனுக்குக் கோபம் பொங்கி,

வெடுக்கெனச் சினத்தி வெள்ளமாய்ப் பாய்ந்திடக்

கண் சிவந்த இதழ்கள் துடித்திடக் கனன்று

சீச்சி, பேயே, சிறிது போழ்தேனும்

"இனி என்முகத்தின் எதிர் நின்றிடாதே என்னும் இவ்வுலகில் என்னிடத்தினில் நீ

போந்திடல் வேண்டாபோ, போ, போ என்று

இடியுறச் சென்னேன்” எனக் குறிப்பிடுகிறார்.

“கண்ணனும் எழுந்து செல்குவானாயினன்,

கவிஞரோ, விழி நீர் சோர்ந்திட

"மகனே போகுதியோ வாழ்க நீ நின்னைத்

தேவர் காத்திடுக! நின்றனைச் செம்மை

செய்திடக் கருதி எதோதோ செய்தேன்

தோற்றுவிட்டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன் மறித்தினி வாராய் செல்லுதி வாழிநீ” -

எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன்” என்று கவிஞன் குறிப்பிட்டுள்ளார்.

“ சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே

எங்கிருந்தோ நல்லெழுதுகோல் கொணர்ந்தான்

‘ஐயனே! நின்வழியனைத்தையும் கொள்வேன்

தொழில் பல புரிவேன் துன்பமிங்கென்றும்