பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனி நினக்கென்னால் எய்திடா தெனப்பல

நல்ல சொல்லுரைத்து நகைத்தனன் மறைந்தனன்

என்று கவிஞர் தனது கவிதையில் குறிப்பிட்டு மேலும் கூறுகிறார்.

“மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்

நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினான்,

"மகனே, ஒன்றையாக்குதல் மாற்றுதல்

அழித்திடல் எல்லாம் நின் செயலன்று காண்,

தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே

வென்றாய், உலகினில் வேண்டிய தொழில் எலாம்,

ஆசையும் தாமும் அகற்றியே புரிந்து

வாழ்க நீ என்றான், வாழ்க மற்றவனே"

என்று முடிவுரை கூறுகிறார்.

கண்ணன் - எனது சற்குரு

இந்த அருமையான பாடலும் மற்றொரு உயர்ந்த கருத்துக்களும் தத்துவ ஞானப் பொருளும் நிறைந்த ஒரு சிறந்த கவிதையாகும். பாரதியின் கவிதைகள் அனைத்தும் பெரும்பாலும் பழைய நிலையிலிருந்து ஒரு புதிய நிலைக்கு வளர்ச்சியடையும் புதுமையும் புதிய நிலையும் மிகுந்த கருத்துக்களாகும். இங்கு பாரதி ஒரு நல்ல குருவை அடைய நினைத்து தேடிச் செல்கிறார்.

“சாத்திரங்கள் பல தேடினேன் - அங்கு

சங்கையில்லாதன சங்கையாம் பழங்