பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூமியைக் காக்கும் தொழிலிலேயே எப்போதும் சிந்தை செலுத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன். எனக்கு யமுனைக் கரையில் கண்ட கிழவன் மீது கோபம் ஏற்பட்டது. கண்ணன் நாட்டை ஆளும் மன்னவன். அவன் அந்தக் கவலையிலேயே எப்போதும் மூழ்கிக் கிடப்பவன், தவம் செய்து பாடுபடுவோருக்கு விளங்கிடாத உண்மைகளை எப்படி இவன் அறிவான்’ என்று சந்தேகப்பட்டேன் என்று குறிப்பிட்டுப் பாரதி கூறுகிறார். இந்த இடத்தில் பாரதி ஒரு வரலாற்றுக் கேள்வியை எழுப்பி அதற்கு அவரே பதிலும் கூறுகிறார்.

கீதையை உரைத்தது கண்ணன். ஒரு அரசன். அதைக் கேட்டவன் அர்ஜுனன். அவனும் ஒரு அரசன். கீதா வாக்கியங்கள்

தத்துவ ஞானக் கருத்துக்கள் நிறைந்தவை. அவைகளை அரச காரியங்களில் அன்றாடம் ஈடுபட்டிருப்பவர்கள் எப்படி அறிவார்கள் என்னும் கேள்வியை எழுப்பி கண்ணனின் பெருமைகளை நினைக்கிறார் கவிஞர்.

அந்த நேரத்தில் கண்ணனுடைய தத்துவஞான போதனைகள் கவிஞருக்குக் கிடைக்கிறது. அவைகளைப் பாரதி மிகவும் சிறப்பாகத் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார்.

“மைந்தனே - பர ஞான முரைத்திடக் கேட்பைநீ - நெஞ்சில் ஒன்றும் கவலையில்லாமலே - சிந்தை ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு விண்ணை அளக்கும் அறிவுதான் வெளிப்படும் என்று பாடுகிறார் மேலும்,