பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 255

காடு , புதரில் வளரினும் - தெய்வக்

காவன மென்றதைப் போற்றலாம்

என்று சிறந்த மெய்ஞ்ஞானக் கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்.

ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த

ஞானம் விரைவினில் எய்து வாய் - எனத்

தேனில் இனிய குரலிலே - கண்ணன்

செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை

ஈனமனிதக் கனவெல்லாம் - எங்ங்ன்

ஏகி மறைந்தது கண்டிலேன் - அறி

வான தனிச்சுடர் நான் கண்டேன் - அதன்

ஆடல் உலகென நான் கண்டேன்”

என்று படி மகிழ்ந்து கவிதையை முடிக்கிறார்.

கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

-

இராகம் தாளத்தோடு சிருங்காரச் சத்துடன் மிகவும் அழகாக அனைவரும் படும் பாடல் இது. குறிப்பாகப் பெண்கள், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது விளையாட்டாகச் செய்தக் குறும்புகளை விளக்கும் பாடலாக அமைந்துள்ளது. கண்ணனைப் பல வடிவங்களிலும் கண்ட பாரதி விளையாட்டுப் பிள்ளையாகவும் கண்ணனை பாவித்துப் பாடி மகிழ்கிறார். நம்மையும் மகிழ்விக்கிறார்.

'தீராத வினையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை”