பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி մ Ե Ս

“மிக்க நலமுடைய மரங்கள் - பல விந்தைச் சுவையுடைய கனிகள் - எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள் - அங்கு

பாடி நகர்ந்து வரும் நதிகள் - ஒரு

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் - எங்கும்,

நீளக்கிடக்கும் இலைக் கடல்கள் - மதி

வஞ்சித்திடும் அகழிச் சுனைகள் - முட்கள்

மண்டித்துயர் கொடுக்கும் புதர்கள்”

என்றெல்லாம் பாடி இன்னும் காடுகளில் உள்ள விலங்கினங்கள், மான்கள், புலிகள், பறவைகள், பாம்புகள், சிங்கம், யானைகள், தவளைகள் முதலியன திரிவதை சத்தமிடுவதைக் கூறி, அந்தத்திக்குத் தெரியாத காட்டில் அகப்பட்டு கண்ணனைத் தேடியலைந்து வேடன் கையில் அகப்பட்டு அலறக் கண்ணன் வந்து காப்பாற்றுவதாகக் கனவு, கண்ணா, மணிவண்ணா, எனது அபயக் குரலில் எனை வாழ்விக்க வந்த அருள்வாழி என்று பாரதி பாடி முடிக்கிறார்.

கண்ணனாகிய காதலனுக்குப் பாங்கியைத் துTது விடுப்பதாகப்

பாவித்துப் பாடியுள்ள பாடல் சிருங்கார ரசமும் மறுப்பக்கம் ரெளத்திரமும் கொண்டது. தங்கப்பாட்டு மெட்டில் பாரதி மிகவும் அருமையாக உணர்ச்சி பொங்கப் பாடியுள்ளார்.

“கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம், அடித்தங்கமே தங்கம், கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்,

எண்ணமுரைத்துவிடில் தங்கமே